வல்லப்பாய்பட்டேல்

சாப்பாட்டுக்கே_வழியில்ல
அதனால இனி ஒன்னய படிக்க வைக்க முடியாது….
மெட்ரிக்குலேஷன் படிப்பே போதும்….
ஏதாவது வேலைக்குப்போ….

ஜாவெர்பாய் பட்டேல் தன் 22வயது மகன சொன்னதும்…
வேதவாக்கா எடுத்துகிட்டு தன்னோட வக்கீல் கனவ மனசுல புதைச்சுகிட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சாரு…..

குடும்ப வறுமை… அஞ்சுபேர் கூடபொறந்தவங்க…
மூணு அண்ணன்…
ரெண்டு தங்கச்சிங்க….

கடினமா உழைச்சுகிட்டே தன்னோட கனவான வக்கீல் படிப்புக்கு காசு சேக்க ஆரம்பிச்சாரு….

கொஞ்ச வருசத்துலயே இங்கிலாந்து போய் படிச்சு #பாரிஸ்டர் பட்டம் வாங்குனாரு……

திரும்ப தன்னோட சொந்த மாநிலமான குஜராத்துக்கு வக்கீலாவே வந்தாரு….

குஜராத் க்ளப்ல ஜாயின் பண்ணி பெரிய கிரிமினல் லாயரா மாறுனாறு….
வாழ்க்கை வறுமைய மாத்தி வசதிய குடுத்துச்சு….

1915 இவர் வாழ்க்கையவே மாத்துச்சு…..

ஆமா….
தீண்டாமை ஒரு தேசியவியாதியா வெள்ளையனால் திணிக்கப்பட்ட நேரம்…..
அத எதிர்த்து குரல் குடுக்க ஆரம்பிச்சாரு….

பொதுமக்கள் பிரச்சினை கைல எடுக்க ஆரம்பிக்க….

1928 குஜராத் சூரத், பர்தேலி மாவட்டத்தில நிலவரி வெள்ளக்காரனுக்கு குடுக்க கூடாதுன்னு போராட ஆரம்பிச்சு சக்சஸ் பண்ணாரு….

அப்ப பொதுமக்கள் எல்லாரும் சேர்ந்து குடுத்த பட்டம்தான்….

#சர்தார்

யெஸ்….
நாம பாக்கற வரலாறு #சர்தார்வல்லப்பாய்பட்டேல் ஓடது…

அவர் சக்சஸ் பண்ணது சாதாரண ஆளா இல்ல….
#அகமதாபாத் நகராட்சி தலைவரா…
(1922,1924,1927)

#பிளேக்பஞ்சம் அப்ப தலவிரிச்சு ஆடுச்சு…
ஒரு சுயம்சேவகரா டெல்லில நிவாரணமுகாம்ல மக்கள் தங்கறதுக்கு அரேஞ்ச் பண்ணாரு…

இதுக்கிடையில தேசிய காங்கிரஸ்ல முன்னேற ஆரம்பிச்சு தலைமை பொறுப்பு ஏத்துக்கற லெவலுக்கு வளந்தாரு…..

(மாமா நேரு காந்தியோட கையாளா இருந்த நேரம்)

1937-38 ல சர்தார் காங்கிரஸ் தலைமை ஏற்கறத மாமா தடுத்துட்டாரு….

தியாகமே உருவான சர்தார் பெரிய விசயமா இத எடுத்துக்காம மக்களுக்காக சேவை பண்ண ஆரம்பிச்சாரு….

மறுபடியும் 1945-46 உறுப்பினர்கள் ஆதரவு சர்தாருக்கு இருக்க….. காந்தி நேருவுக்கு பதவிய குடுத்தாரு…

1947 செப்டம்பர் பாகிஸ்தான் காஷ்மீர ஆக்கிரமிப்பு பண்ண ஆரம்பிக்க…..
வெகுண்டெழுந்த சர்தார் படைகளை அனுப்ப ட்ரை பண்ண…..
(ஏன்னா இவர்தான் முதல் உள்துறை மந்திரி)

மாமாவும் மவுண்ட் பேட்டனும் தடுத்தாங்க….

(மவுண்ட் பேட்டனா ன்னு கேக்கறவங்க வரலாறு நல்லா படிங்க….மவுண்டு பொண்டாட்டிய மாமா ஆட்டய…..)

இதயும் முடிஞ்ச அளவு மீறி கொஞ்சம் படைய காஷ்மீர் அரசருக்கு சப்போர்ட் அனுப்புனாரு….(இல்லன்னா இன்னிக்கு காஷ்மீர் நமக்கு இல்ல)

சுதந்திரம்வாங்குன நேரத்துல 597 சமஸ்தானங்கள் இந்தியால இருந்துச்சு…..
அதை இணைக்க முடியாது….
ஏற்கனவே எல்லாத்தையும் சுரண்டியாச்சுன்னு கணக்கு பண்ணித்தான் வெள்ளையன் சுதந்திரம் குடுத்தான்….
ஆனா…..

#சர்தார்வல்லப்பாய்பட்டேல்…..

தன்னோட புத்தி கூர்மையாலும்…..ராஜதந்திர யுக்தியாலும்…
(சிலரை மிரட்டியும், அன்பாவும்)
எல்லா சமஸ்தானங்களையும் இந்தியாவோட கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாரு…..

(இன்னிக்கு சிலை 597 அடி உயரம் காரணம் 597 சமஸ்தானம்)

திருவிதாங்கூர் சமஸ்தானம்,

ஹைதராபாத் நிஜாம்
(இவரு பாகிஸ்தான் கூட இணையப்போறேன்னு சுதந்திர பிரகடனமே பண்ணிட்டாரு)

அப்புறம் ஜூனாகார்நவாப்….

நம்ம தல #OperationPolo ன்னு பேர் வச்சு…..
ரத்தம் சிந்தாம நாலே நாள்ல இந்த மூணு சமஸ்தானங்களை இணைச்சிட்டாரு…..

(இன்னிக்கும் பல பக்கீஸ் செப்டம்பர் 17ல ஹைதராபாத் ல கொண்டாடுதுக)

(1948 செப்டம்பர் 13 ட்டூ17)

இத காந்தியார் மட்டுமில்ல எந்த கொம்பனாலயும் சாதிக்க முடியாது….

ஒத்த ஆளு 597 சமஸ்தானங்களை ஒண்ணு சேத்து முழு இந்தியாவை
கட்டமைச்சிட்டாரு….

#ஒருங்கிணைந்தஇந்தியாவை கட்டமைத்த #சிற்பி

இவரோட வாழ்நாள்ல பெரும்பாலும் விவசாயிகளுக்கே போராடுனாரு…

.(முதல் பத்தில சொன்ன வரிகொடாமை இயக்கம் ஆரம்பிச்சவரு இவர்தான்)

அதனாலதான் இந்தியா முழுக்க இருக்கும் விவசாயிங்களோட கடப்பாறை மண்வெட்டி, சுத்தி, கோடாரி,
இதயெல்லாம் வாங்கிட்டு வந்து அத வச்சு சிலைய செஞ்சாங்க……

இவரமாதிரி தியாகியை (பிரதமர் பதவிய விட்டு கொடுத்து துணைபிரதமரா இருந்தாரு)
உலகறியச் செய்யணுங்கறது ஒவ்வொரு இந்தியக்குடிமகனுக்குமான பொறுப்பு…….
அதைத்தான் ஒரு சாதாரண குடிமகனா #மோடி செஞ்சுருக்காரு…..

ஆக்சுவலா காங்கீஸ் செய்யணும்…
டுபாக்கூர்ஸ் செய்ய மாட்டானுக…..
நாம் நம் இந்தியாவின் முன்னோடி..
#சர்தார்வல்லப்பாய்பட்டேல் ஐ வணங்குவோம்……

கொசுறு::-)
இந்த பேஜ் டிபி ல சர்தார் வல்லபாய் படேல் வைக்கறதுக்கும் #பொதுநலம்விரும்பி ன்னு பேர் வச்சதுக்கும் இதுவே காரணம்…..

காங்கிரஸ் கட்சியால் புறக்கணிக்கப்பட்ட மாகாணங்களை இணைத்த இரும்பு மனிதர்

இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் ……. சர்தார் வல்லபாய்யிடம் சரன்டர் ஆனா நிஜாம்

மறைக்க பட்ட வரலாறு மறைத்த காங்கிரஸ்

1947 ல் சுதந்திரம் அடைந்தவுடன் எந்த சமஸ்தானம் எங்கே சேரனுமோ சேர்ந்து கொள்ளலாம் என்று வெள்ளைக்காரன் கூறி விட்டான் ,வெள்ளைக் காரனுக்கு இந்தியா பிரிவதில் தானே லாபம் .., இதை பயன் படுத்திய ஹைதராபாத் நிஜாம் போன்ற நிஜாம்கள் நாங்கள் பாகிஸ்தானுடன் தான் இணைவோம் என்று அறிவித்தும் விட்டனர் ,,

பாகிஸ்தானோடு இணைக்கப் போவதாக அறிவித்து கனவில் காத்து இருந்தார் நிஜாம் , நிஜாம ஹைதிராபாத் மாநிலம் பூரா உள்ள முஸ்லிம்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி ஒரு படையை உருவாக்கினார் , அந்த படைக்கு ரஜாக்கர்ஸ் என்று பெயர்., ரஜாக்கர்ஸ் படைகள் முதலில் ராய்ச்சூர் ரயில் நிலயத்தை கைப்பற்றினர் , இந்துக்களை அங்கிருந்து விரட்டவும் செய்தார். . இந்தியாவுக்கு போய் விடுங்கள் , இது எங்கள் நாடு என்று விரட்டினர் இந்தியாவுக்குள்ளே இன்னும் ஒரு பாகிஸ்தான் உருவாகும் நிலை உருவானது ,,

அந்த நிலையில் நேரு, எல்லா சமஸ்தானத்தையும் ஒன்றிணைக்க நம்மால் முடியாது , யார் எங்கு போக வேண்டுமோ போகட்டும் என்ற மன நிலையில் இருந்தார் ,,நேருவுக்கு மவுண்ட் பேட்டன் பிரபு ஆதரவு , நேருவுக்கு பதவி மட்டுமே குறி . அப்போது உள்துறை அமைச்சராக வல்லபாய் பட்டேல் இருந்தார்

வல்லபாய் பட்டேல் எவ்வளவோ சொல்லியும் நேரு கேப்பதாக தெரிய வில்லை, உங்களுக்கு என்ன நமக்கு சுதந்திரம் கிடைச்சாச்சு பிறகு என்ன என்று நேரு கூறிவிட்டார் ,, வல்லபாய் பட்டேலுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை , இங்கே அனைத்து சமஸ்தானங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தேச பக்தர்கள் குரல் எழுப்பினார்கள் ,,

அமைச்சரவை கூட்டினார் பட்டேல் , நேருவும் கலந்து கொண்டார் , சமஸ்தான பிரச்சனை விவாதிக்க பட்டது ,, நேரு முடியாது ,ஒன்றும் செய்ய முடியாது என்று பேசி கொண்டு இருந்தார் ,, வல்லபாய் பட்டேல் நேருவிடம் எனக்கு முன்று நாள் மட்டும் அவகாசம் தாருங்கள் ,அதற்குள் எந்த முடிவும் எடுக்காதிர்கள் என்று கெஞ்சினார் ,

நேரு வேண்டா,, வெறுப்பாக சரி முன்று நாள் மட்டுமே அவகாசம் அதற்க்கு மேல் ஒரு மணி நேரம் கூட தர மாட்டேன் என்றார் நேரு ,, கூட்டம் கலைந்தது

இந்திய ராணுவத்தை வைத்து ஹைதராபாத் நிஜாமுக்கு படை நடவடிக்கைகளுக்கு எதிராக களம் இறங்கி இரண்டே நாளில் ஹைதராபாத் சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல்

வெற்றி பெற்ற பிறகு நேரு வெற்றி வீரராக வேடம் போட்டார். என்னால் தான் ஜெயுத்தது என்று கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் தெரிவித்தார் , அதையும் அமைதியாக கேட்டு கொண்டார் வல்லபாய் பட்டேல் .. நிஜாமுக்கு கவர்னர் பதவியும், அரசு மானியமும் கொடுத்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht.

Diese Website verwendet Akismet, um Spam zu reduzieren. Erfahre mehr darüber, wie deine Kommentardaten verarbeitet werden.