கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார்
வந்தாரை வாழ வைத்த தமிழகம் தன் விடுதலைக்காக
வெந்தாரை வாழ வைக்க மறந்துவிட்டது மறுத்துவிட்டது.
இன்று கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல்
வ உ சிதம்பரனார் அவர்களின் நினைவு தினம்.
கல்லூரி நாட்களில் அவர் பற்றி பேசிய பேச்சின்
நினைவு சிதறல்கள்:
மாற்றானின்
மாண்பினையே
மார்தட்டிப் பேசும்
மடமை
மிகுந்த
மக்களின்
மத்தியிலே
மண்ணின்
மானத்தைக் காக்க
மார்தட்டி
மரக்கலம் செலுத்திய
மன்னாதி மன்னன்
மறத்தமிழன்
மண்ணடியில்
மண்ணெண்ணெய் விற்றுப்பிழைத்தார்.
இதந்தரு மனையின் நீங்கிஇடர்மிகு சிறைப்பட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறி பழிமிகுந் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல்கள்விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே என்று பாடிய பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பாட்டுக்கு இலக்கணமாய் இலக்கியமாய் இலங்கிய சிதம்பரனார் சிந்தாதிரிப்பேட்டையில் அரிசி விற்றுப் பிழைத்தார்.