கல்யாண அலப்பறைகள்

கல்யாண அலப்பறைகள்…

வாங்க மாப்பிள்ளைக்கு யார், யார் ,
“ என்ன உறவுன்னு அவங்க நடை உடையை வச்சே கண்டுபிடிப்போம்“……!!

1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல …..,

„பளிச்சின்னு தெரியிறது மணப்பொண்ணு“….!!

ஆனா….,
அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப்
போட்டுக்கிட்டு…..,

மண்டபத்துல சுத்திக்கிட்டு இருந்தா…..,

„அது தான் பொண்ணோட தங்கச்சி“…..!!

2. கல்யாண வீடியோல எல்லா பிரேம்லேயும் பொண்ணு மாப்பிள்ளைக்கு அடுத்தபடியா……,

„ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிற மாதிரி
நிக்கிற பொண்ணு „….

„அது மாப்பிள்ளையோட அக்கா“…!!

3. ஆளுக்கும் போட்டுருக்க டிரஸ்ஸுக்கும்…..,

“ சம்பந்தமே இல்லாம“……,

ஆனா மாப்ளைக்கு சமமா ஒருத்தன்……,

கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு
டம்மியா,

முன்னால நின்னுகிட்டு இருப்பான்.

அது வேற யாரும் இல்லை.

„மாப்பிள்ளையோட அக்கா புருஷன்“……!!

அந்தக் கோட்டு….,

அவருடைய கல்யாண ரிஷப்ஷனுக்கு பிறகு….,

“ இப்பதான் போட்டுருப்பாரு“…..!!

4. இன்னொருத்தன் மாப்பிள்ளை மாதிரியே…..,

„வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு“…..,

மணவறையில் நிக்காம…..,

டான் மாதிரி…..,

“ அங்க இங்க ஓடுறது ஒடியாருறது“….,

“ வர்றவங்கள கவனிக்கிறது“….,

„ஸ்டேஜ்ல ஏறுறது இறங்குறதுனு“……

“ ரொம்ப ஆக்டிவா
ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான்“……!!

„அவன் தான் மாப்பிள்ளையோட தமபி“….!!

„ரூட்டு கிளியரான சந்தோஷத்துல“…….,

“ தலைகால் புரியாம சுத்திக்கிட்டு
இருப்பான்“…….!!

5. மாப்பிள்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ“…..,

வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது……,

„மின்னல் மாதிரி ஒருத்தன்“…

“ ஒரு கர்ச்சீப்பை வச்சிக்கிட்டு மாப்பிள்ளை மூஞ்சியை தொடைச்சிட்டே இருப்பான்“…..!!

„அவன் மாப்ளையோட ஸ்கூல் பிரண்டா இருக்கும்“…..!!

முதல் நாள் நைட்டு பேச்சிலர் பார்ட்டில ……,

„மூச்சுத் திணறத், திணறக் குடிச்சவனும் அவனாத் தான் இருக்கும்“

6. „கல்யாணம் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி“…..,

“ எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு……

மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் புல் போதையில கத்திக்கிட்டு இருப்பான்.

„அவனை யாருமே மதிக்காம“….,

ஆனா
„ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவனை உள்ளே வரச் சொல்லி கூப்பிட்டா“…….,

„அவன் தான் மாப்பிள்ளையோட தாய் மாமன்“……..!!
7. ஒரே ஒரு அம்மா
மட்டும் வச்ச கண்ணு வாங்காம……,

“ கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும்“………

அப்படி இருந்தா…..,

“ அது பொண்ணோட அப்பா வழி அத்தை“……!!

இல்லை .
„அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு“…..,

„பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னு“….

„நீங்களே
கண்டுபுடிச்சிடலாம்“….

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht.