கண்ணதாசன் சொன்ன ரகசியம்

கண்ணதாசன் சொன்ன ரகசியம்…..

„பாவமன்னிப்பு“ படத்தில் „நடிகர் திலகம்“ சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக  படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும்  என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங்.

„மெல்லிசை மன்னர்கள்“  விஸ்வநாதன் – ராமமூர்த்தி, „கவியரசு“ கண்ணதாசன் ஆகியோரோடு அந்த அற்புதமான  சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள்.

படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார்.

அதன்படி, அந்த  நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு அமைய வேண்டும் என்று விரும்பி  இயக்குனர் ஏ.பீம்சிங் இதை கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி அவர்களிடம்  தெரிவித்தார்.

வழக்கம்போல், „மெல்லிசை மன்னர்கள்“ மெட்டமைக்க, கண்ணதாசன் பாட்டு  எழுதிக் கொடுத்தார்.   பாடலை படித்துப் பார்த்த ஏ.பீம்சிங்கிற்கும், விஸ்வநாதனுக்கும் முதலில் ஒன்றும்  விளங்கவில்லை.

„இதில் என்ன புதுமை இருக்கிறது, நுட்பம் உள்ளது“ என  குழம்பினார்கள்.   திரும்ப, திரும்ப படித்துப் பார்த்துவிட்டு கண்ணதாசனிடம்  தயங்கிக் கேட்டார்கள்.

கண்ணதாசன் வழக்கமான தன்னுடைய குழந்தைப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே „பாடலைப் படித்துக் காட்டுங்கள்“ என்றார்.   எம்.எஸ்.வி. உடனே,“ எல்லோரும் கொண்டாடுவோம்… எல்லோரும்  கொண்டாடுவோம்.

அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும்  கொண்டாடுவோம்“ என்று மெட்டில் பாடினார்.

கண்ணதாசன், „இன்னுமா புரியலை, பிறப்பால்  இந்துவாக பிறந்து வாலிப வயதை எட்டிப் பிடித்தவன் ஒரு முஸ்லீமாக  வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான „ஓம்“ என்ற நாத மந்திரம் அவன் வாயினில் இருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன்.

இப்பொழுது பாருங்கள்“ என்று பாடிக் காட்டினார்.   எல்லோரும் கொண்டாடு  “ ஓம் “

எல்லோரும் கொண்டாடு  „ஓம் “

அல்லாவின் பெயரைச் சொல்லி  நல்லோர்கள் வாழ்வை எண்ணி   எல்லோரும் கொண்டாடு „ஓம் “

வருவதை வரவில் வைப்போ “ ஓம் “

செய்வதை செலவில் வைப்போ „ஓம் “

முதலுக்கு அன்னை என்போ „ஓம் “

Sivaji - allah song

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht.

Diese Website verwendet Akismet, um Spam zu reduzieren. Erfahre mehr darüber, wie deine Kommentardaten verarbeitet werden.