நெய் குளம்

நெய் குளம் :-

திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஹயக்கிரீவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமம் இதன் பெருமையைப்பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர், “லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும்?” என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர்,”  ” பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும் ,”என்றார். அகத்தியர் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது, இவ் லிதாம்பிகையை தரிசித்து, ” லலிதா சகஸ்ரநாமம் “ சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர், ” லலிதா நவரத்தின மாலை “ என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.

நெய் குள தரிசனம்

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது.
விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும்.
சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர்.
அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில்
பிரதிபலிக்கும்.

இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது.
இதுதான் நெய்க்குள தரிசனம்.
நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி பெற்ற
தரிசனம்.

திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம்.

இதோ உங்களுக்காக!

Hinterlasse eine Antwort

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht.

Du kannst folgende HTML-Tags benutzen: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>